நாடு முழுவதும் 78-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திரமோடி.
சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார்.
வயநாடு நிலச்சரிவில் உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலாக செயல்பட்டதற்கு பாராட்டு தெரிவித்து, செவிலியர் சபீனாவுக்கு வீர, தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்குகிறது தமிழக அரசு.
சுதந்திரதின கொண்டாட்டத்தை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் பாரம்பரிய சின்னங்கள். நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கும் வண்ண விளக்குகளால் அலங்காரம்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு சமூக நீதிக்கே அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை.
பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகட்டின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. வெள்ளிப்பதக்க கோரிக்கையை நிராகரித்தது சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம்.
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மேற்குவங்கம் முழுவதும் வெடித்த போராட்டம். மருத்துவமனை முன்பு போராடியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பதற்றம்.
பயிற்சி மருத்துவர் படுகொலையை மூடி மறைக்க முயற்சி நடப்பதாக மேற்குவங்க அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு. குற்றவாளியை தூக்கிலிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக முதலமைச்சர் மம்தா திட்டவட்டம்.
தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள் . இதனால், சென்னை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மதுரை, திருச்சியில் வெளுத்து வாங்கிய கனமழை. தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் கணிப்பு.