கமலா ஹாரிஸ் - வினேஷ் போகத் புதிய தலைமுறை
இந்தியா

தலைப்புச் செய்திகள் | அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் முதல் ஒலிம்பிக் வெல்லப்போகும் வினேஷ் போகத் வரை!

PT WEB
  • ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கத்தை உறுதி செய்தார் இந்தியாவின் வினேஷ் போகத். இதன்மூலம், ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையை படைத்தார்.

  • ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தல். முதல் முயற்சியிலேயே 89 புள்ளி 34 மீட்டர் தூரம் வீசி முத்திரையை பதித்தார்

  • ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்தியா ஜெர்மனியிடம் 2-3 என்ற கோல் கணக்கில் போராடித் தோல்வியடைந்தது.

நீரஜ் சோப்ரா - வினேஷ் போகத்
  • இலங்கை கடற்படை கப்பல் மோதி மாயமான மீனவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.

  • வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் அறிவிக்கப்பட்டார். மேலும், நாடாளுமன்றத்தையும் கலைத்தார் அதிபர் முகமது சகாபுதீன்.

  • வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் அளிக்க இங்கிலாந்து மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து, மேலும் சில நாட்கள் இந்தியாவில் இருப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

  • வங்கதேசத்தில் அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்களை கைது செய்துவருகிறது அந்நாட்டு ராணுவம். இந்தவகையில், ஹஸன் முகமது, ஜுனைத் அகமது என பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது.

  • வங்கதேசத்தில் சிறுபான்மையினர் குறிவைத்து தாக்கப்படுவதால் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஜனநாயக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

  • வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.

  • மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம். இந்நிலையில், நிலச்சரிவில் உயிரிழந்தோரை அவமதிப்பதாகவும் ஆதங்கம்.

  • அமெரிக்காவில் ஜனநாயகக்கட்சி அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு. மின்னசோட்டா ஆளுநர் Tim Walz ஐ துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்தார் கமலா.