இன்றைய காலை தலைப்புச் செய்திகள் Facebook
இந்தியா

காலை தலைப்புச் செய்திகள்! வயநாடு மீட்புப்பணிகள்-நீதிமன்றத்தில் இரண்டரை மணி நேரம் பதில் அளித்த விஷால்

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தொடரும் வயநாடு மீட்புப்பணிகள் முதல் நீதிமன்றத்தில் இரண்டரை மணி நேரம் பதில் அளித்த விஷால் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • வயநாட்டிலுள்ள நீர்நிலைகளில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை SCUBA டைவிங் செய்து தேடும் மீட்புப்பணியை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

  • வயநாட்டில் நிலச்சரிவுக்கு அஞ்சி மலையில் தஞ்சமடைந்த பழங்குடி குடும்பத்தை கடுமையான சவால்களுக்கு மத்தியில் பத்திரமாக மீட்டது வனத்துறை. இந்நிலையில், இதற்கு கேரள முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

  • சூரல்மலையில் ஒன்றரை கிலோ மீட்டருக்கு நீண்டிருந்த பள்ளிக்கூட சாலைகள், வீடுகள் உருதெரியாமல் போன பரிதாபம்.

  • வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 2ஆவது நாளாக ஆய்வு மேற்கொண்டார் ராகுல்காந்தி. இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் 100 வீடுகள் கட்டித்தரப்படும் என உறுதியளித்துள்ளார்.

  • மேப்பாடி முகாமில் தஞ்சமடைந்துள்ள மக்களின் பசியை போக்கும் கேரள சமையல் கலைஞர்கள்... 3 வேளையும் உணவளிப்பதுடன் இயல்பு நிலை திரும்பும் வரை எங்கும் செல்லப்போவதில்லை என கூறுவதால் நெகிழ்ச்சி.

  • நிலச்சரிவால் உருக்குலைந்த வயநாட்டில் இரவு, பகலாக தொடரும் மீட்புப் பணிகள்.

  • வயநாடு நிலச்சரிவு காரணமாக தமிழக மலை மாவட்டங்களை கண்காணிக்க அரசு உத்தரவு. கூடலூர் அருகே ஆபத்தான குடியிருப்புகளில் வசித்து வந்தவர்களை பத்திரமாக அப்புறப்படுத்த நடவடிக்கை.

  • பிணையில் வந்த எம்.ஆர். விஜயபாஸ்கரை கரூரில் உள்ள வீட்டில் சந்தித்து பேசினார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், தமிழக அரசு திட்டமிட்டு பொய் வழக்குப்பதிவு செய்திருப்பதாக குற்றச்சாட்டு.

  • டெல்லியில் ஐஏஎஸ் தேர்வர்கள் மூன்று பேர் மழைநீரில் மூழ்கி உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம். மழைநீர் வடிகால் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.

  • பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதலில் 25 மீட்டர் பிஸ்டல் இறுதிப்போட்டியில் இன்று களமிறங்குகிறார் மனுபாக்கர் மூன்றாவது பதக்கத்தை வெல்வாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

  • ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வரலாற்று சாதனையை படைத்த இந்தியாவின் லக்ஷயா சென். சீன தைபே வீரர் சோ டைன் சென்-ஐ வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம்.

  • லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் 2வது நாளாக சாட்சியம் அளித்த நடிகர் விஷால். 150-க்கும் மேற்பட்ட கேள்விக்கு சாட்சி கூண்டில் நின்றவாறு இரண்டரை மணி நேரம் பதில்.