இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

தலைப்புச் செய்திகள்|வயநாடு நிலச்சரிவு-133 பேர் பலி To நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமனின் விளக்கம்!

PT WEB
  • நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்க ராணுவம், பேரிடர் மீட்புப் படைகள் இரவிலும் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இந்த கனமழை காரணமாக, 133 பேர் உயிரிழப்பு மற்றும் 128 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

  • சேறும் சகதியுமான சூரல்மலை பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

  • கனமழை எதிரொலியாக கேரளாவில் 11 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி நடைபெறும் எனவும் அறிவிப்பு.

  • கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழர்கள் இருவர் உயிரிழந்த சூழலில், உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி. மேலும், கேரளாவுக்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  • மோசமான வானிலையால் வயநாடு பயணத்தை ஒத்தி வைத்த ராகுல் காந்தி, பிரியங்கா. இந்நிலையில், விரைவில் வருகை புரிந்து தேவையான உதவிகளை செய்வோம் என எக்ஸ் தளத்தில் பதிவு.

  • தொடர் நீர்வரத்தால் முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை. இதனால், 16 கண் மதகு வழியாக உபரி நீர் முழுவதும் வெளியேற்றம்.

  • தமிழ்நாட்டிற்கு ஆகஸ்ட் மாதத்திற்கான 45.95 டி.எம்.சி. நீரை வழங்கவேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி ஒழங்காற்று குழு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

  • நிலமோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு பிணை கோரிய வழக்கில், சிபிசிஐடி காவல்துறையிடம் தினமும் கையெழுத்திடவேண்டும் என நிபந்தனை.

  • பட்ஜெட்டில் மாநிலத்தின் பெயர் இல்லையென்றால் புறக்கணிப்பு என அர்த்தமில்லை என பட்ஜெட் மீதான பதிலுரையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

  • புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ளது. துணைநிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் உரையுடன் ஆரம்பமாகிறது.

  • ஒலிம்பிக் போட்டியில் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கம் வென்றது. குத்துச் சண்டையில் அமித் பாங்கல், பிரீத்தி பவார் தோல்வியடைந்தனர்.

  • இலங்கைக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.