நாடாளுமன்றத்தில் இன்று தொடர்ந்து 7ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில், தனிநபர் வருமான வரியில் சலுகைள் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பலரிடையே எழுந்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல். மேலும், நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருக்கும் என்றும் விளக்கம்.
நாடு முழுவதும் நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு. இதற்கு, நீட் வினாத்தாள் கசியவில்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் நாடு முழுவதும் கசிந்ததா என்பது உறுதி செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த நிலையில், சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதிலளிக்க 3 நிபுணர்கள் குழு அமைக்க டெல்லி ஐ.ஐ.டிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா சட்டப்பேரவையிலும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி தீர்மானம் நிறைவேற்ற முடிவு. இந்நிலையில், விலக்கு கோரும் மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
வீடு கட்டுவதற்கான கட்டட அனுமதியை ஆன்லைன் மூலம் பெறும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹரிஹரனை 4 நாட்களும், எஞ்சிய மூவரை 3 நாட்கள் விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கன்வார் யாத்ரீகர்கள் செல்லும் வழியில் உள்ள உணவகங்களில் கடை உரிமையாளரின் பெயரை குறிப்பிட உத்தரவிட்ட விவகாரத்தில், உத்தரப்பிரதேச மாநில அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தொடர் கனமழையால் மும்பை நகரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், வெள்ளிக்கிழமை வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடற்படை போர்க்கப்பல் INS பிரம்மபுத்ராவில் தீ விபத்து ஏற்பட்டதில், இளநிலை மாலுமியை தேடும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட கமலா ஹாரிஸுக்கு பெருகும் ஆதரவு. கமலா ஹாரிஸ் சார்பில் பரப்புரை மேற்கொள்ளவிருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.