இன்றை காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

காலை தலைப்புச் செய்திகள் | மின்கட்டண உயர்வு முதல் மாடு முட்டி உயிரிழந்த காவல் அதிகாரி வரை!

இன்றை காலை தலைப்புச் செய்தியானது, மின்கட்டண உயர்வு முதல் மாடு முட்டி காவல் அதிகாரி உயிரிழப்பு வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • தமிழகத்தில் மின்சார கட்டணங்களை உயர்த்தியது மின்சார ஒழுங்குமுறை ஆணையம். இந்நிலையில், வீடுகளுக்கான மின் கட்டணம் யூனிட்டிற்கு 20 காசு முதல் 55 காசு வரை உயர்த்தப்பட்டுள்ளது.

  • வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு. மேலும், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் விளக்கம்.

  • வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணம் கிலோவாட்டுக்கு 40 காசு அதிகரித்ததால், தொழில் மேலும் நலிவடையும் என சிறு, குறு நிறுவனங்கள் சங்கத் தலைவர் ரகுநாதன் வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழக மின்சார வாரியம்
  • அதிகரிக்கும் நிதி இழப்பை ஈடுகட்டவே மின்கட்டண உயர்வு என்றும், மத்திய அரசின் நிதியை பெறுவதற்கு, ஆண்டுதோறும் மின் கட்டணம் திருத்தம் செய்வது முன் நிபந்தனை எனவும் தமிழக அரசு விளக்கம்.

  • காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம். அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

  • கர்நாடகாவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது, இதனால், காவிரியில் நீர்வரத்து 25,500 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

  • சட்டவிரோத பணிப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு வரும் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விசாரணையின் போது அமலாக்கத்துறை துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  • கடலூரில் மாடு முட்டி கிழே விழுந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பேருந்தில் சிக்கி உயிரிழப்பு. சாலைகளில் கட்டுப்பாடின்றி திரியும் கால்நடைகளால் மேலும் ஒரு உயிர் பறிபோன் பரிதாபம்.

  • அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. துணை அதிபர் பதவிக்கு ஜே.டி. வாப்ஸ் போட்டியிடுகிறார்.