Armstrong cctv - euro 2024 புதிய தலைமுறை
இந்தியா

தலைப்புச் செய்திகள் | ஆம்ஸ்ட்ராங் கொலை CCTV வெளியீடு முதல் யூரோ கோப்பையை வென்ற ஸ்பெயின் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிசிடிவி காட்சிகள் வெளியீடு முதல் ட்ரம்ப்பை கொல்ல துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • யூரோ கால்பந்து கோப்பையை வென்றது ஸ்பெயின் அணி. இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 2க்கு1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

UEFA EURO 2024
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில் நீதிபதி ஆய்வு செய்த நிலையில், ஆயுதங்களை கைப்பற்ற அழைத்துச் சென்றபோது தப்பியோடியதால் என்கவுன்டர் செய்ததாக காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

  • பொதுமக்கள் மற்றும் கீழ்நிலை அதிகாரிகளிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தியுள்ளார்.

  • சனாதன தர்மமின்றி பாரத நாட்டை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என உலக வைஷ்ணவ மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.

  • தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க கூட்டணி கட்சியினர் ஓர் உயிராக உழைக்க வேண்டும் என காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு.

  • புதுச்சேரி புதுநகரில் பாதாள சாக்கடையில் இருந்து வீசிய துர்நாற்றத்தால் மீண்டும் விஷவாயு கசிவு என அஞ்சமடைந்த நிலையில், மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  • ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண வரவேற்பு விழாவில், திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு.

  • ட்ரம்ப்பை கொல்ல முற்பட்ட 20 வயது இளைஞரை சுட்டுக் கொன்ற சிறப்பு பாதுகாப்புப் படை. மேலும், தாக்குதல் குறித்த தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை சேகரிக்கும் எஃப்.பி.ஐ.

  • பிரான்சில் பாஸ்டில் தின அணிவகுப்பில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட ஒலிம்பிக் சுடர். இங்கு கண்கவர் சாகசங்களில் விமானப்படையினர் ஈடுபட்டனர்.

  • விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றார் இளம்வீரர் அல்காரஸ் நட்சத்திர வீரர் ஜோக்கோவிச்சை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.