இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

இன்றைய காலை தலைப்புச்செய்திகள்|விக்கிரவாண்டியில் வெல்லப்போவது யார்? To தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா

PT WEB
  • இன்று காலை 8 மணிக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாகைசூடப்போவது யார்? என்பது இன்று தெரியவரும்.

  • சென்னையின் பல இடங்களில் இரவில் கொட்டிய கனமழையால் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

  • திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலத்த மழை ஏற்பட்டது. மேலும், தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

  • நாளை அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு.மேலும், காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என அறிவிப்பு.

  • காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசின் செயல் ஏற்கத்தக்கது அல்ல என எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  • மதுரையில் பள்ளி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல்காரர்களை நெல்லையில் சுற்றி வளைத்த தனிப்படை காவல்துறை.

  • கோவை அருகே வேகமாக வந்த தனியார் பேருந்தால் கோர விபத்து ஏற்பட்டதில், சாலையோரம் நின்றிருந்த இருவர் மீது மோதியதில் ஒருவர் உயிரிழப்பு ஏற்பட்டது.

  • ஏமனில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒன்று கூடி பேரணி நடத்திய மக்கள், இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

  • விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லப்போவது யார்?. இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அல்கராஸ் உடன் மோதுகிறார் ஜோகோவிச்.

  • ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழா கோலாகலம் நடைப்பெற்றது.இதில், வெளிநாட்டு தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்களின் கலந்துக்கொண்டனர். இதனா, விழாக்கோலம் பூண்டதாக மாறியது மும்பை.