இன்றைய காலை தலைப்புச் செய்திகள் ட்விட்டர்
இந்தியா

தலைப்புச் செய்திகள்|ஆஸ்திரியாவில் பிரதமர் பெருமிதம் முதல் சாய்னா உடன் விளையாடிய குடியரசுத்தலைவர் வரை

PT WEB
  • “இந்தியா ஒருபோதும் போரை தொடங்காது. உலகிற்கு யுத்தத்தை அல்ல; புத்தரை கொடுத்திருக்கிறோம்” என ஆஸ்திரியாவில் பிரதமர் மோடி பெருமிதம்.

ஆஸ்திரியாவில் பிரதமர் மோடி
  • ஊரகப்பகுதிகளுக்கான "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை தருமபுரியில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

  • மக்களவை தேர்தலில் சந்தித்த தோல்வி குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை. 2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருப்பதாக தகவல்.

  • விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 விழுக்காடு வாக்குகள் பதிவு நடைப்பெற்றுள்ளது

  • நீட் முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், தேர்வுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்.

  • இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை மூன்றாம் வாரத்தில் தொடங்கும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவலளித்துள்ளது.

  • இந்திய வீராங்கனை சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடிய குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு. குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற சுவாரஸ்ய நிகழ்வு.

President Droupadi Murmu with Saina Nehwal
  • சென்னையில் நள்ளிரவு பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழையால், புறநகர் பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

  • தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில் பெட்டியில் ஏசி பழுதானதாக புகார் அளிக்கப்பட்டபோது, ரயிலின் அபாயச்சங்கிலியை இழுத்து ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  • பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமின் தங்கலான் பட டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

  • ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி. டி20 போட்டிகளில் 150ஆவது வெற்றியை பதிவு செய்து வரலாற்று சாதனை.