இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

தலைப்புச் செய்திகள்| திமுகவுக்கு பா.ரஞ்சித்தின் கேள்வி To உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை தாக்குதல்

PT WEB
  • ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் புதினுடன் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய புதின், ”மோடி மீண்டும் பிரதமரானது விபத்தல்ல , பல ஆண்டு உழைப்பின் பலன்.” என்று தெரிவித்துள்ளார்.

  • ஜம்மு கஷ்மீரில் ரோந்துபடை வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்டதில், 5 வீரர்கள் வீரமரணம், மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  • மத்திய அரசு கொண்டு வந்த குற்றவியல் சட்டங்களில் திருத்தம் செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து உத்தரவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

  • இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டியில் ஓய்ந்தது பரப்புரை். இறுதிநாளில் தீவிரமாக அரசியல் தலைவர்கள் வாக்குசேகரித்தனர்.

  • தமிழ்நாட்டில் காவல்துறை சுதந்திரமாக செயல்படவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தல்.

  • உண்மையிலேயே அரசுக்கு பட்டியலின மக்கள் மீது அக்கறை இருக்கிறதா ..இல்லை, வெறும் வாக்குக்காக மட்டுமே சமூக நீதியா என்று தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்

  • சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்றார்.அதில், ரவுடிகளை கட்டுப்படுத்துவதே முதல் பணி என பேட்டியளித்துள்ளார்.

  • விஷசாராய மரணங்கள் தொடர்பான சங்கராபுரம் காவல்நிலைய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 21 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தவறிழைத்தவர்களை கண்டுபிடிக்காவிட்டால் மறுதேர்வு நடத்த வேண்டும் எனவும், தேசிய தேர்வுகள் முகமை, சிபிஐ, மத்திய அரசு உரிய பதில் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

  • உக்ரைன் நகரங்கள் மீதான ரஷ்யாவின் ஏவுகனை தாக்குதலில் 36 பேர் பலியாகியுள்ளனர். மேலும், இந்த தாக்குதலில் குழந்தைகள் மருத்துவமனையும் தாக்கப்பட்டதாக உக்ரைன் தகவல அளித்துள்ளது.

  • பாரிஸ் ஒலிம்பிக்கில் தேசிய கொடியை சரத் கமலுடன் இணைந்து பி.வி.சிந்து ஏந்தி செல்வார் என அறிவிப்பு.மேலும், இந்திய அணியின் தலைவராக அறிவிக்கப்பட்ட மேரி கோம் விலகிய நிலையில் ககன் நரங் நியமனம்.