இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

தலைப்புச் செய்திகள் | ஆன்மிக நிகழ்வில் 116 பேர் மரணம் முதல் கூட்டணி பற்றி பிரதமர் விமர்சனம் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முதல் கூட்டணி குறித்து பிரதமர் மோடி விமர்சனம் செய்தது வரை நேற்றைய பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

  • கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு பல்வேறு வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்த நிலையில், கூட்டணி கட்சிகளை ஒட்டுண்ணி போல காங்கிரஸ் உறிஞ்சுவதாக விமர்சனம் செய்துள்ளார்.

  • பிரதமர் நரேந்திர மோடியின் உரை முழுவதும் அமளியில் ஈடுபட்டன எதிர்க்கட்சிகள். மேலும், மணிப்பூர் வன்முறை, நீட் முறைகேடு குறித்து முழக்கம் எழுப்பினர்.

மோடி
  • அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட தனது உரையின் பகுதிகளை மீண்டும் சேர்க்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

  • தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆண்டுதோறும் 100 மகளிர் தொழில்முனைவோர் அடையாளம் காணப்படுவர்கள் என அமைச்சர் உதயநிதி பேச்சு.

  • திமுக இரட்டை வேடமிடுவதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. மேலும் சட்டமன்றத்தில் கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்காமல், நாடாளுமன்றத்தில் நீட் தேர்வை விவாதிக்க கோருவதாக விமர்சனம் செய்துள்ளார்.

  • விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்கு யாருக்கு? திமுக - பாமக தலைவர்களிடையே கருத்து மோதல்.

  • திருச்செந்தூர் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுவதாக எழுதி வைத்துவிட்டு சென்ற திருடன்.

  • விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர் ஆண்டி முரே விலகல். காயம் காரணமாக இரட்டையர் பிரிவில் மட்டுமே பங்கேற்பார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • விம்பிள்டன் தொடரில் இருந்து நடப்பு சாம்பியன் மார்கெட்டா வொன்ட்ரூசோவா வெளியேற்றம். முதல் சுற்றில் தோல்வி அடைந்துவெளியேறி மோசமான சாதனை படைத்த மார்கெட்டா.