இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

தலைப்புச் செய்திகள் | ராகுல் காந்தியின் மக்களவை பேச்சு முதல் IAS அதிகாரிகள் பணியிட மாற்றம் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் பேச்சு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் நடைமுறை சட்டம் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • அரசியல் சாசனத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். மேலும் “வன்முறை, வெறுப்பு, பொய் புரட்டுகளை பரப்புபவர்கள் இந்துக்களாகவே இருக்க முடியாது” என்று நாடாளுமன்றத்தில் ஆவேமாக பேசியுள்ளார்.

  • ராகுல் காந்தியின் பேச்சு இந்துக்கள் மீதான தாக்குதல் என பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அரசியலமைப்பு சட்டம் எதை சொல்கிறதோ அதன்படி தாம் நடப்பதாக பதிலளித்துள்ளார்.

ராகுல் காந்தி - மோடி - மக்களவை - ஓம் பிர்லா
  • தடைச்செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக தஞ்சையில் கைதான இருவரை நீதிமன்றக் காவலில் வைக்க தேசிய பாதுகாப்பு முகமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

  • நாடு முழுவதும் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  • தமிழ்நாட்டில் 15க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சூழலில், வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ மருத்துவத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

SupriyaSahu TNGovt
  • ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் 4 லட்சம் ரூபாய் தருவதாக கூறி 87 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, திருவள்ளூரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மீது காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  • உயிரிழந்த கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் பெற்றோரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாணவியின் வீட்டிலும் சிறப்பு புலனாய்வு குழு சோதனை மேற்கொண்டுள்ளது.

  • விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இருந்து இந்திய வீரர் சுமித் நாகல் செர்பியா வீரருடன் 4 செட்கள் விளையாடி போராடி தோல்வியடைந்தார்.

  • விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னணி வீராங்கனை சபலென்கா விலகல். பயிற்சியின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக பங்கேறவில்லை என விளக்கம்.