150 ஆண்டுகால காலனியாதிக்க சட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நாடு முழுவதும் மூன்று புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் இன்று முதல் அமலாகின்றன.
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை 31 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை மாற்றமில்லை எனவும் தகவல்.
முரண்பாடுகள் களையப்பட்ட புதிய சந்தை மதிப்பு வழிகாட்டி இன்று முதல் அமலாகிறது.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி நீங்கலாக நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திமுக அரசு வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல், மதுவில் கவனம் செலுத்துகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.
69 சதவிகித இட ஒதுக்கீட்டை காப்பாற்ற, தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சட்டசபையில் சாராயத்தை தவிர வேறு பிரச்னைகள் பேசப்படுவதில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.
கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் தேர்வுகள் துவங்கி, முடிவுகளும் வெளியாகும் என கல்லூரி கல்வி இயக்குனர் கார்மேகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக உபேந்திர திவேதி பதவியேற்றார். இவர் ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவமிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏதென்ஸில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டதில், கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராட்டம்.
இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச டைவிங் போட்டியில், உடலை வில்லாக வளைத்து சாகசம் நிகழ்த்தி வீரர், வீராங்கனைகள் அசத்தல்.