வரலாற்றில் முதல்முறையாக மக்களவை சபாநாயகரை தேர்ந்தெடுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஓம் பிர்லா, I.N.D.I.A. கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்ய I.N.D.I.A. கூட்டணி நாடாளுமன்ற குழு தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கு தரவேண்டிய 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் 75 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.
விஷ சாராய மரண வழக்கில் சிபிஐ விசாரணை கோரி ஆளுநரிடம் மனு அளித்த அதிமுக மாநில காவல்துறையின் விசாரணை நேர்மையாக இருக்காது என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்களை சிபிஐக்கு மாற்றக்கோரும் வழக்கு இன்று மீண்டும் விசாரணை செய்யவுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வாய்ப்பு.
தருமபுரியில் ஃபர்னிச்சர் கடையில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை அணைக்க தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரத்திற்கு மேல் போராட்டம்.
ஆல் இந்தியா பர்மிட் கொண்ட வெளிமாநிலத்தில் பதிவு செய்த ஆம்னி பேருந்துகளுக்கு தடை விதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
பாலாற்றில் புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்துள்ளார். இந்தவகையில், அணை கட்டுவதை தடுக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சருக்கு இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியன் - 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. தற்போதும் தொடரும் ஊழல்தான் இந்தியன் - 2 உருவாக காரணம் என நடிகர் கமல்ஹாசன் பேச்சு.
கென்யாவில் வரிகளை உயர்த்தும் அரசின் முடிவை கண்டித்து நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு. இந்த போராட்டத்தில் 5 பேர் உயிரிழப்பு, 30- க்கும் மேற்பட்டோர் படுகாயம்.
யூரோ கால்பந்து தொடரில் இங்கிலாந்து, டென்மார்க் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம். வெற்றி பெறாமல் புள்ளிகள் அடிப்படையில் தகுதி பெற்றதால் ரசிகர்கள் மகிழ்ச்சி.