தலைப்புச் செய்திகள் pt web
இந்தியா

தலைப்புச் செய்திகள் | அதிகரிக்கும் விஷ சாராய மரணங்கள் முதல் இன்றைய மத்திய பட்ஜெட் ஆலோசனை கூட்டம் வரை

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது அதிகரித்துவரும் கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் முதல் இன்று கூடும் மத்திய பட்ஜெட் ஆலோசனை கூட்டம் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்வடைந்த நிலையில், கவலைக்கிடமாக 30-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 90க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது.

  • ஆந்திராவில் இருந்து கார் மற்றும் ரயில் மூலம் மெத்தனால் வாங்கிவந்து சாராயம் காய்ச்சியது அம்பலமாகியுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி விஷசாராய மரணங்கள் தொடர்பாக இதுவரை 8 பேரை கைது செய்தது சிபிசிஐடி.

  • அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள்
  • கள்ளக்குறிச்சி உயிரிழப்புகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின்தான் பொறுப்பு என்றும், சட்டப்பேரவையில் அளித்த விளக்கம் ஏற்க முடியாதது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.

  • புதுச்சேரி ஜிப்மர், சேலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “விஷ சாராயம் அருந்தியவர்கள் மருத்துவமனை செல்ல தயங்கியதே உயிரிழப்பு அதிகரிக்க காரணம்” என்று பேட்டி

  • கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது தாக்குதல். விஷசாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்திக்க சென்றபோது திடீரென தாக்கிய நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இந்நிலையில், நிலுவையில் உள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்க பிற்பகலில் கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில்.

  • நீட் தேர்வு எழுதிய மாணவர்களுடன் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி சந்திப்பு. மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் இந்தியா துணை நிற்கும் என உறுதியளிப்பதாக பதிவு.

  • டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்தியாவின் வெற்றி தொடருமா? வங்கதேச அணியுடன் இன்றிரவு 8 மணிக்கு மோதுகிறது.

  • கோட் படத்தின் அதிரடியான ஷார்ட்ஸ் வீடியோவை வெளியிட்டார் இயக்குநர் வெங்கட்பிரபு. இந்நிலையில், சமூக வலைதளங்களில் வீடியோவை பகிர்ந்து விஜய் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.