இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

HeadLines|இந்தியா கொண்டுவரப்படும் குவைத் விபத்தில் இறந்தவர்கள் உடல்கள் To இத்தாலி சென்றார் பிரதமர்!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, குவைத் தீ விபத்து முதல் இத்தாலி சென்ற பிரதமர் மோடி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை கொண்டு வருவதற்காக குவைத் விரைந்தது இந்திய விமானப்படை விமானம். இதன்படி, கேரள மாநிலம் கொச்சினுக்கு இன்று உடல்கள் எடுத்து வரப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • குவைத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

  • விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கானே ட்புமனுத்தாக்கல் இன்று தாெடங்குகிறது. ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத்துவங்கியுள்ளது.

  • ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் மோடி.இம்மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி உள்பட பல்வேறு விவாதங்களில் பங்கேற்கிறார்.

  • நீட் தேர்வு விவகாரத்தில் 1563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டது. மேலும், வரும் 23ஆம் தேதி மறுதேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு நழுவ பார்ப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். மேலும், கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டது மத்திய அரசின் திறமையின்மையை காட்டுவதாகவும் விமர்சனம் செய்துள்ளார்.

  • உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மேகதாது அணை கட்ட முடியாது எனக் கூற முடியுமா? என பாஜகவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

  • முல்லைப் பெரியாறு அணையில் தொழில்நுட்ப ரீதியாக எந்த பிரச்சினையும் இல்லை எனவும், கேரள அரசின் புதிய அணைக்கான அறிக்கை குறித்து விவாதம் நடைபெறவில்லை என்றும் கண்காணிப்பு குழு விளக்கமளித்துள்ளது.

  • பாடல்கள் மீது இசையமைப்பாளர் இளையராஜா எந்த உரிமையும் கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில், எக்கோ நிறுவனம் வாதம்.

  • ப்ளோரிடாவில் தொடரும் மழையால் இன்று நடைபெறும் அமெரிக்கா, அயர்லாந்து ஆட்டத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. போட்டி ரத்தானால், டி20 உலகக்கோப்பையிலிருந்து பாகிஸ்தான் வெளியேறும் சூழல் ஏற்படும்.