டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாட்டின் பிரதமராக நரேந்திர மோடிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனடிப்படையில், 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்று சரித்திரம் படைத்தார் நரேந்திர மோடி.
30 கேபினட் அமைச்சர்கள், 5 தனி பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், எல்.முருகன், எஸ். ஜெய்சங்கர் மீண்டும் அமைச்சர்கள் ஆகியுள்ளனர்.
பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள குமாரசாமி, சிராக் பஸ்வான் ஆகியோரும், தெலுங்கு தேசம் கட்சியின் ராம்மோகன் நாயுடுவும் அமைச்சராக பதவியேற்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் இருந்து அதிகபட்சமாக 11 பேருக்கும், பீகாரில் இருந்து 8 பேரும், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிராவில் இருந்து தலா 6 பேரும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில், அமைச்சர்களுக்கான துறைகளும் இன்று ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடிக்கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும், மதச்சார்பற்ற தன்மையை பராமரிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
கோடை விடுமுறை முடிந்து நேற்றிரவு சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பிய மக்களால் தென் மாவட்ட ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், முதல் வாரத்திற்குள் புத்தகங்கள் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலால், பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் பக்தர்கள் 10 பேர் உயிரிழப்பு. இந்நிலையில், இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, அமித் ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று நடந்த பரபரப்பான போட்டியில் கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் சாம்பியன் பட்டத்தை வென்றார் ஸ்பெயின் வீரர் அல்காரஸ். ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் வீழ்த்தி அபாரம்.