மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கையை தொடங்க ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் பணியில் 38ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு முன் தபால் வாக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ விளக்கமளித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மூவாயிரம் காவலர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.
3ஆவது முறையாக ஹாட்ரிக் அடிப்பாரா நரேந்திர மோடி..? பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றுமா இந்தியா கூட்டணி? என்ற மிகப்பெரிய ஆவல் எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குகள் இன்னும் சற்று நேரத்தில் துவங்கவுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலில் வெற்றிபெறுமா காங்கிரஸ்?
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன் பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளன.இந்நிலையில், ஜெ.பி. நட்டா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வாக்குஎண்ணிக்கையில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசமைப்பு சட்டத்தின் படி அச்சமின்றி நாட்டுக்காக பணியாற்றவேண்டும் என வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திறந்த மடலை எழுதியுள்ளார்.