இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் நாளை வாக்கு எண்ணிக்கை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது நேற்று தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்ற நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும், எதிர்க்கட்சிகள் புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று நண்பகலில் விளக்கம் அளிக்கிறது.

  • தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் 42 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. மேலும், கலவரத் தடுப்பு வாகனங்களும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • முதலில் தபால் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையரிடம் I.N.D.I.A. கூட்டணி மனு அளித்துள்ளது.

  • I.N.D.I.A. கூட்டணி கட்சிகள் தேர்தல் நடைமுறையை சீர்குலைக்க முயற்சி செய்கின்றன என தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக - காங்கிரஸ்
  • அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 46 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது மீண்டும் பாஜக பெமா முதலமைச்சராகிறார்.

  • சிக்கிமில் ஆட்சியை தக்கவைத்தது எஸ்கேஎம் கட்சி. மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31 இடங்களை கைப்பற்றி சாதனை.

  • தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்ந்ததுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • ஐஸ்லாந்தில் அதிபர் தேர்தலில், 34 வாக்குகள் பெற்று புதிய அதிபரானார் ஹல்லா தோமஸ்.

  • ஒருநாள் போட்டியின் சிறந்த வீரர் என ஐ.சி.சி.யின் விருதை வென்றுள்ளார் விராட் கோலி.

  • 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொங்கியது. இந்நிலையில், முதல்போட்டியில் பப்புவா நியூ கினியா அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி.