இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|பிரதமர் மோடியின் தமிழக வருகை T0 வாட்டி வதைக்கும் வெப்ப அலை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது பிரதமர் மோடியின் தமிழக வருகை முதல் வாட்டி வதைக்கும் வெப்ப அலை வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி இன்று தியானம் செய்ய உள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு அளித்த நிலையில், குமரி மாவட்ட தேர்தல் அலுவலரிடம், திமுக வழக்கறிஞர் அணி சார்பிலும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

  • மக்களவை இறுதி கட்டத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது.இந்நிலையில் 57 தொகுதிகளில் வாக்கு சேகரிப்பு தீவிரமாக நடைப்பெற்று வருகிறது

  • பிரதமர் மோடியைத் தொடர்ந்து அமித்ஷாவும் இன்று புதுக்கோட்டையில் உள்ள சத்தியகிரீஸ்வரர் கோயில் சிறப்பு பூஜையில் பங்கேற்கிறார்.

  • வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் வெப்ப அலை. தலைநகர் டெல்லியில் 50 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் கொளுத்துவதால் மக்கள் அவதி.

  • ரிமல் புயல் காரணமாக வெள்ளத்தில் மிதக்கும் மிசோரம், அசாம் மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

  • கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கனமழையால் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தால், கொச்சி நகர வீதிகளை மழைநீர் சூழ்ந்து மக்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

  • ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காரை ஓட்டியதாக யூடியூபர் டிடிஎஃப் வாசனை கைது செய்தது காவல்துறை..

  • திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விமரிசையாக நடைபெற்ற கோயில் படுகளம் திருவிழா மூங்கில் குச்சிகளால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட பொம்மைகளுடன் ஆட்டம் போட்ட பக்தர்கள்.

  • பிரஞ்சு ஓபன் டென்னிஸின் 3ஆவது சுற்றுக்கு முன்னேறிய உலகின் முதல் நிலை வீராங்கனை ஸ்வியாடெக்.ஆடவர் பிரிவில் கார்லஸ் அல்கராஸ், சிட்சிபாஸ் உள்ளிட்டோர் முன்னேற்றம்.