இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | பிரதமரின் தமிழக வருகை முதல் வெளுத்து வாங்கிய கனமழை வரை!

PT WEB
  • பிரதமர் நரேந்திர மோடி நாளை கன்னியாகுமரி வருக தரவுள்ள நிலையில், அங்குள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்கிறார்.

  • “பிரதமர் மோடி மறைமுக பரப்புரை செய்ய முயற்சிக்கிறார்; தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், கன்னியாகுமரியில் தியான நிகழ்வுக்கு அனுமதி தரக்கூடாது” என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

  • ஜூன் ஒன்றாம் தேதி திமுக வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் வாக்கு எண்ணிக்கை முகவர்களும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி
  • காரைக்கால் அருகே 13 வயது சிறுவன் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், வெறிச்செயலில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

  • கேரளாவில் தொடர் மழை எதிரொலியாக கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை.

  • ரிமல் புயல் காரணமாக அசாம், மணிப்பூர் மாநிலங்களில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது.

  • மிசோரம் மாநிலத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு பாதிப்பால் ஒரேநாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • இந்தியாவுடனான ஒப்பந்தத்தை மீறி கார்கில் தாக்குதலை நடத்தியது தவறு என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வருத்தம் தெரிவித்துள்ளார்.

  • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றில் பிரான்ஸ் வீரரை நேர் செட் கணக்கில் வீழ்த்தி, இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார் நட்சத்திர வீரர் ஜோகோவிச்.