ட்ரம்ப், நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து மக்கள் போராட்டம் pt web
இந்தியா

தலைப்புச் செய்திகள்| ட்ரம்பைக் கொலை செய்ய திட்டமா? ஈரான் விளக்கம் To 11 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்த தொடர்ந்து வலுத்து வரும் எதிர்ப்பு முதல் தனுஷ் மீது நயன்தாரா வைத்த குற்றச்சாட்டு வரை இன்றைய தலைப்பிச் செய்திகளாக இடம்பெற்றுள்ளது..

PT WEB
  • மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்த தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி மக்கள் போராட்டம் நடத்தினர்..

மதுரை சின்ன உடைப்பு கிராமத்தில் காலையிலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் குவிப்பு
  • சின்ன உடைப்பு கிராமத்திற்கு கனரக வாகனங்களுடன் வந்த அதிகாரிகள்... முன்னெச்சரிக்கையாக ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • தமிழகத்தில் டெல்டா உட்பட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு... காரைக்கால், புதுச்சேரியிலும் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

மழை
  • சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை இன்று மாலை 5 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

  • வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு இருந்தது தொடர்பாக தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. உணவு விநியோகம் செய்த நிறுவனத்திற்கு 50ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு... 5 இடங்களிலும் சோதனை முடிந்ததாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் மீண்டும் வன்முறை மூண்டுள்ளது!
  • மணிப்பூரில் முதலமைச்சர், அமைச்சர்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமைதியை மீட்டெடுக்க பாதுகாப்பு படையினருக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • உத்தரப்பிரதேசத்தில் தீ விபத்தில் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டி.என்.ஏ. பரிசோதனை நடத்த வேண்டுமென குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

டொனால்ட் ட்ரம்ப்
  • ட்ரம்ப்பை கொலை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.. ட்ரம்ப்புக்கு ஏதேனும் நேர்ந்தால் அது போருக்கு வழிவகுக்கும் என அமெரிக்கா எச்சரித்த நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

  • இந்தியாவின் அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் - 20 அடுத்த வாரம் விண்ணுக்கு பாய்கிறது... மிக அதிக எடை கொண்டது என்பதால் அமெரிக்காவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் ஏவத்திட்டம்...

  • மலை வாசஸ்தலமான சிம்லாவில் குவியும் சுற்றுலா பயணிகள்... இதமான சூழல் நிலவுவதால் வெளிநாடுகளில் இருந்தும் வரும் மக்கள்...

நயன்தாரா-விக்னேஷ் சிவன் மற்றும் தனுஷ்
  • தனது கல்யாணம் தொடர்பான ஆவணப்படத்தில், நானும் ரவுடி தான் படம் தொடர்பான காட்சிகளை பயன்படுத்த அனுமதிக்காத தனுஷுக்கு நயன்தாரா கண்டனம் தெரிவித்துள்ளார். தனுஷின் பழிவாங்கும் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.