இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | விவாகரத்து அறிவித்த ஹர்திக் முதல் உ.பி-யில் தடம் புரண்ட ரயில் வரை!

PT WEB
  • நீலகிரி மாவட்டத்தில் கனமழை எதிரொலி காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  • நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யும் எனவும், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

  • நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பு 75,748 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்
  • நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் மற்றும் தேர்வு மையங்கள் வாரியாக வெளியிட வேண்டும் எனவும், நாளை நண்பகல் 12 மணிக்குள் வெளியிட வேண்டும் எனவும் தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 4 சட்டத்திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தநிலையில் , சட்டத்திருத்தங்கள் அமலுக்கு வந்ததாக தமிழக அரசு அறிவிப்பு.

  • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசனை. இந்நிலையில், பொதுமக்களின் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தல்.

  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் அஞ்சலை, பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தலைமறைவாக இருக்கும் அஞ்சலை குறித்து அவரது மருமகனிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

  • டெல்லியிலிருந்து அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதில், நடுவானில் சென்றபோது பிரச்னை ஏற்பட்டதால், ரஷ்யாவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

  • உத்தரப்பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு. இந்நிலையில், இரவு முழுவதும் மீட்புப்பணி நடைபெற்றது.

  • இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார் சுப்மன் கில்.

  • மனைவியை பிரிந்தார் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா. மகனை இருவரும் கவனித்து கொள்வோம் என சமூக வலைத்தளத்தில் பதிவு.