இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|தலைவர் 171 அப்டேட் To சோனியா காந்தியை விமர்சித்த பிரதமர் மோடி!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தலைவர் 171 அப்டேட் முதல் சோனியா காந்தியை விமர்சித்த பிரதமர் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து ஒரே நேரத்தில் மக்கள் சென்னை திரும்பியதால் உளுந்தூர்பேட்டை மற்றும் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  • மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 69 .72 விழுக்காடு வாக்குப்பதிவு என்ற தகவலை இரண்டு நாட்களுக்கு பின் இறுதிப் புள்ளி விவரத்தை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்.

  • சென்னையில் 3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு குறைவாக பதிவாகியுள்ளது.அதன்படி, மிகக் குறைந்த அளவாக மத்திய சென்னையில் 53.96% மட்டுமே பதிவாகியுள்ளது.

  • தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாதவர்கள் மாநிலங்களவை எம்.பி. யாகி விடுகின்றனர் என சோனியா காந்தி குறித்து பிரதமர் மோடி மறைமுக விமர்சனம்.

  • இந்தியா கூட்டணியை பிரிப்பதற்காகவே ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டிருக்கிறார் என ராஞ்சி பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு.

  • வயநாடு உட்பட கேரளாவில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்கும் என ராகுலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுரேந்திரன் புதிய தலைமுறைக்கு பேட்டி.

  • 4 ஆண்டு இளங்கலை படித்தவர்கள் நேரடியாக முனைவர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு...

  • மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை தொடர்ந்து விமரிசையாக நடைபெறும் தேரோட்டத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து தரிசனம்.

  • மதுரையில் களைகட்டிய சித்திரை திருவிழாவில் அழகர் கோயிலில் இருந்து தங்கப்பல்லக்கில் தூங்கா நகர் நோக்கி கள்ளழகர் புறப்பட்டார்.

  • தூர்தர்ஷன் இலச்சினையை காவி நிறத்திற்கு மாற்றியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், “அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டமே.”என்று விமர்சனம் செய்துள்ளார்.

  • சீர்கெட்டு போயிருக்கும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க தகுந்த நடவடிக்கை தேவை என அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

  • உளுந்தூர்பேட்டை அருகே ஏற்பட்ட தகராறில் இருதரப்பு இளைஞர்கள் சாலையில் தாக்கிக் கொண்ட சம்பவத்தில், அரசு பேருந்தை வழிமறித்து தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் திருக்கல்யாண நிகழ்வு நிகழ்ந்தேறியது.இந்நிகழ்வு,சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி விமரிசையாக நடந்தது.

  • சென்னை அய்யப்பன்தாங்கலில் தெரு நாய் மீது காரை ஏற்றிக்கொன்ற நபர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சின்னத்திரை நடிகை காவல்துறையில் புகார்.

  • கிருஷ்ணகிரி அருகே சித்தப்பாவை நிலப்பிரச்னை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்.

  • தமிழகம், புதுச்சேரியில் தொடர் விடுமுறை எதிரொலி காரணமாக, காரைக்கால் கடற்கரையில் மக்கள் கூட்டம் திரண்டது.

  • கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவியதன் எதிரொலியாக தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

  • மேகதாது அணை திட்டம் தமிழக மக்களுக்கும் பலன் அளிக்கும் என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி பேட்டி.

  • மத்தியப்பிரதேசத்தில் பாலியல் புகாரில் கைதானவரின் வீட்டை, நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக இடித்து அகற்றம்.

  • டெல்லியில் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில், கடும் புகையால் குடியிருப்புவாசிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

  • நிகர வரி வருவாய் எதிர்பார்ப்புகளை தாண்டி உயர்ந்துள்ளது என மத்திய நிதியமைச்சகம் தகவல்.

  • ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பாகிஸ்தான் செல்கிறார்.இந்நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு இடையே இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

  • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்-க்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி.இதில், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு உதவினார் தெவாட்டியா.

  • நடுவருடன் களத்தில் சீறிய விராட் கோலி.இந்நிலையில், இவர் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

  • தலைவர் 171 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.மேலும், இன்று வெளியாகிறது இப்படத்தின் அப்டேட்.