நடன இயக்குநர் ஜானி, பாஜக எம்எல்ஏ காலில் விழுந்த டெல்லி அமைச்சர்  pt web
இந்தியா

தலைப்புச் செய்திகள்| ஜானி மாஸ்டருக்கான தேசிய விருது ரத்து முதல் பாஜக MLA காலில் விழுந்த அமைச்சர் வரை

சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி, அதையொட்டி செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றங்கள், ஹரியானாவில் நடந்துமுடிந்த தேர்தல் என இன்றைய தலைப்புச் செய்திகளைப் பார்க்கலாம்..

PT WEB

72 போர் விமானங்கள் அணிவகுக்க, மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. சென்னை மக்களுக்கு புதுவித அனுபவத்தை தர காத்திருக்கிறது விமானப்படை..

விமான சாகச நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... பல்வேறு முக்கிய அதிகாரிகளும் பார்வையிட உள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

#JUSTIN | விமான சாகச நிகழ்ச்சி - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

விமானப்படை சாகசத்தையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் சிரமமின்றி கண்டுகளிக்க பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. சேலத்தில் கனமழையால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி..

தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை... அக்டோபர் 15 ஆம் தேதி முதல் பரவலாக மழை பொழியும் என இந்திய வானிலை மையம் கணிப்பு.

ஹரியானாவில் அமைதியான முறையில் நடந்து முடிந்தது தேர்தல்... 66 புள்ளி 96 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்... ஜம்மு காஷ்மீரிலும் காங்கிரஸ் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்...

பாஜக எம்எல்ஏவின் கால்களை தொட்டு வணங்கிய டெல்லி அமைச்சர்... பேருந்து பாதுகாவலர்கள் விவகாரத்தில் துணைநிலை ஆளுநரை சந்திக்க வருமாறு காலில் விழுந்து அழைப்பு...

நடன இயக்குநர் ஜானிக்கு அறிவிக்கப்பட்டிருந்த தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது. போக்சோ வழக்கில் சிக்கிய நிலையில் பறிபோன அங்கீகாரம்...

நடன இயக்குநர் ஜானி

இஸ்ரேலுக்கான ராணுவ தளவாட ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் எனக்கூறிய பிரான்ஸ் அதிபருக்கு நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். ஆதரவு இருந்தாலும், இல்லாவிட்டாலும் போரில் இஸ்ரேல் வெற்றிபெறுவது உறுதி என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தியா- வங்கதேச அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. காயத்தால் விலகிய ஷிவம் துபேவுக்கு பதிலாக திலக் வர்மா களமிறக்கப்படுகிறார்.