பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு கொண்டுவரப்பட்டது ஆம்ஸ்ட்ராங்கின் உடல். இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோரவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்று சென்னை வருகிறார் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி. இதனால், பெரம்பூர் முழுவதும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பினை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படுமா? என உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்புராயன் முன்பு இன்று காலை வழக்கு விசாரணை நடக்கவுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 8 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி பரமசிவம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக மேலும் மூன்று பேரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஏற்கனவே கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான் என வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் பேட்டியளித்துள்ளார்.
கடலூரில் பாமக பிரமுகர் சிவசங்கருக்கு அரிவாள் வெட்டு குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டதில், காரில் பயணித்த தாய், மகள் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
நாளை மணிப்பூர் செல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. அங்கு சென்று நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
கள்ளச்சாராயம் வருவதற்கு மதுவிலக்குதான் காரணம் எனவும், மதுவிலக்கு செய்தால் கள்ளச்சாராயம் மிகும் எனவும் மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜிம்பாம்வே அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தவிழுவியது. உலகக்கோப்பை வெற்றியை தொடர்ந்து நடைபெற்ற முதல் போட்டியில் ஷாக் கொடுத்த இந்திய இளம்படை .