இந்தியா

இன்று கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

இன்று கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

webteam

தொடர் குண்டு வெடிப்புகளை அடுத்து இலங்கை நாடாளுமன்றம் இன்று அவசரமாக கூடுகிறது.மேலும், நாடாளுமன்றத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் இயற்றப்படுகிறது.

இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள், ஆடம்பர ஹோட்டல்களை குறிவைத்து அடுத்தடுத்து 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த‌னர். இலங்கையை உலுக்கிய இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில், அங்கு குண்டுவெடிப்பு நடத்துவதற்காக பயன்படும் 87 டெட்டனேட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இதையடுத்து, இந்தியாவில் தாக்குதல் ‌நிகழாமல் இருப்பதற்காக, இலங்கையை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் கடலோர பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய பயங்கரவாதிகள் கடல் வழியாக தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவும், மும்பை தாக்குதல் போல மீண்டும் ஒரு சம்பவம் இந்தியாவில் நடந்து விடக் கூடாது என்பதற்காகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தொடர் குண்டு வெடிப்புகளை அடுத்து இலங்கை நாடாளுமன்றம் இன்று அவசரமாக கூடுகிறது.மேலும், நாடாளுமன்றத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் இயற்றப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரம் சிங்கே மற்றும் எதிர்கட்சித் தலைவர் உரை நிகழ்ந்தவுடன் பயங்கரவாத தடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படுகிறது.