இந்தியா

சமூக வலைதளங்களுக்கு கடிவாளம்; இந்திய அணி மாபெரும் வெற்றி: இன்னும் சில முக்கியச் செய்திகள்

சமூக வலைதளங்களுக்கு கடிவாளம்; இந்திய அணி மாபெரும் வெற்றி: இன்னும் சில முக்கியச் செய்திகள்

webteam

9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. கொரோனா காலக்கட்டத்தில் ஏற்பட்ட சிரமங்களை கருத்தில் கொண்டு நடவடிக்கை.

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் தவிப்பு. 2ஆவது நாளாக போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்கிறது.

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை உயர்த்தியதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு. போக்குவரத்துக் கழக ஊழியர்களுடன் பேச முதல்வர் முன்வருவாரா என்று கேள்வி.

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழப்பு. சிவகாசி சுற்றுவட்டாரத்தில் தொடரும் சோகம்.

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்களுக்கு தொல்லை தருவது வழக்கம் என கோவையில் பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம். வளர்ச்சிக்கு எதிரான அரசியல் கட்சிகளை மக்கள் தள்ளி வைக்கத் தொடங்கி விட்டதாகவும் பெருமிதம்.

அரசு மற்றும் நீதிமன்றம் கேட்கும் தகவல்களை தராவிட்டால் 5 ஆண்டுகள் சிறை. சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.

வங்கிக் கடன் மோசடியில் தேடப்படும் குற்றவாளியான நிரவ் மோடி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார். சிபிஐ, அமலாக்கத்துறை ஆதாரங்களை ஏற்று பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு.

டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 400 விக்கெட்டுகளை எட்டிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார் அஸ்வின்.

71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாளில் முடிந்த டெஸ்ட் போட்டி. இரவு-பகல் போட்டியில் இங்கிலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.