இந்தியா

#TopNews சுய ஊரடங்கு தளர்வு; கொரோனாவுக்கும் அதிகரிக்கும் உயிரிழப்பு; இன்னும் சில செய்திகள்

Rasus

தமிழகத்தில் காலை 5 மணியுடன் நிறைவடைந்தது ஊரடங்கு உத்தரவு. பயணிகளின் தேவையை பொறுத்து பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படும் என அறிவிப்பு.

சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரை. அத்தியாவசிய சேவைகள் தவிர பிற சேவைகளை வருகிற 31-ஆம் தேதி வரை ரத்து செய்யவும் அறிவுறுத்தல்.

+1, +2 பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு. தமிழகத்தில் 9 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 600 ஆக உயர்வு. இத்தாலியில் மட்டும் ஒரே நாளில் 651 பேர் உயிரிழப்பு.

தன்னலமற்று சேவையாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு கரவொ‌லி எழுப்பி நன்றி தெரிவித்த மக்கள். பிரதமரின் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் ஏராளமானோர் மணியோசை எழுப்பியும் பாராட்டு.

நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில் சேவைகள் வருகிற 31-ஆம் தேதி வரை ரத்து. சரக்கு ரயில் சேவைகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என இந்திய ரயில்வே அறிவிப்பு.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலோ மெர்கல் தனிமைப்படுத்திக் கொண்டார். வைரஸ் பாதித்த மருத்துவருடன் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், நடவடிக்கை.

திரைப்பட இயக்குநரும், நடிகருமான விசு காலமானார். சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில், உயிர் பிரிந்தது.