இந்தியா

#TopNews தூக்கிலிடப்பட்ட நிர்பயா குற்றவாளிகள் முதல் அதிகரித்த கொரோனா உயிரிழப்புகள் வரை..!

Rasus

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர். ஒட்டு மொத்த தேசத்திற்கும் நீதி கிடைத்திருப்பதாக நிர்பயாவின் தாய் உருக்கம்.

வரும் 22-ஆம் தேதி யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். கொரோனா தடுப்பு நடவடிக்கையின் முன்னெடுப்புக்காக சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்.

தமிழகத்தில் வரும் 31-ஆம் தேதி வரை கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் மக்கள் வருகையை நிறுத்திவைக்க உத்தரவு. வாரச்சந்தைகளை மூடவும் ஆணையிட்டார் முதல்வர் பழனிசாமி.

கொரானோ தடுப்பு நடவடிக்கைக்காக 20,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டத்தை செயல்படுத்துகிறது கேரள அரசு. முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டரில் தகவல்.

நாடு முழுவதும் கொரோனாவால் 173 பேர் பாதிப்பு. பஞ்சாப்பை சேர்ந்த முதியவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆயிரத்தை தாண்டியது. இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை சீனாவை கடந்தது.

சீனா செய்த தவறுக்கு உலக நாடுகள் விலை கொடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை சீன அரசு மறைத்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு.

மத்தியப்பிரதேச சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு. முதல்வர் கமல்நாத் பெரும்பான்மையை நிரூபிக்ககோரி பாஜக தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு.