பங்குச் சந்தை புதிய தலைமுறை
இந்தியா

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் என்ன? லாபம் தரும் பங்குகள் எவை எவை? தங்கம் விலையில் ஏற்றம் இருக்கா?

இன்றைய பங்குசந்தையின் நிலவரம்: லாபம் தரும் பங்குகள் என்னென்ன?

Jayashree A

பங்குச் சந்தை - இன்றைய நிலவரம்

இன்று பங்குச் சந்தையானது சற்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. கடந்த வெள்ளியன்று, தேசிய பங்குச் சந்தையானது நிப்டி 23,290.15 புள்ளிகள் முடிவு பெற்றிருந்த நிலையில், இன்று 23319.15 புள்ளிகளில் வர்த்தகமானது ஆரம்பித்தது. தற்போதைய நிலவரப்படி, நிப்டி 50 புள்ளிகள் மட்டும் அதிகரித்து 23,345-க்கு வர்த்தகமாகி வருகிறது.

இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 76,693.36 புள்ளிகள் முடிவடைந்திருந்த நிலையில், இன்று 76,935.41 புள்ளிகளில் வர்த்தகமானது தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி சென்செக்ஸ் 76,764.37 புள்ளிகளில் வர்த்தகமானது நடந்து கொண்டிருக்கிறது.

லாபம் கொடுத்து வரும் நிறுவனங்கள்

power grid, ultra cemco, hero motor, grasim, cipla, ntpc, nestle india, axis bank, adani ports, britannia, tatasteetl, divislab, reliance, bpcl, coal india, L&T, coal india, drreddy போன்ற பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுத்து வருகிறது.

வர்த்தகம் உயருமா?

முன்னதாக ராகுல்காந்தியின் பங்குச்சந்தை மீதான கருத்து பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்திவந்த நிலையில், இன்று பங்குச் சந்தையின் மீது முதலீட்டாளர்களின் கவனம் குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆகவே பங்குச் சந்தையானது ஒரே புள்ளியில் சற்று ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது என்றும் கூறப்படுகிறது. பங்குச் சந்தை உயருமா? அல்லது சரியுமா? என்று இன்றைய முடிவில் தெரியவரும். இருப்பினும், பங்குகள் உயர்வை சந்திக்கலாம் என்று நிபுணர்கள் கூறிவருகின்றனர்.

இன்றைய தங்கத்தின் விலை

சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் கடந்த இரு தினங்களாக தங்கம் வாங்குவதை நிறுத்தியிருப்பதால், தங்கமானது இன்றும் விலை சரிவை கண்டு வருகிறது. அதன்படி ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து ரூ.53,040 க்கு விற்பனை ஆகிறது. கிராம் 20 ரூபாய் குறைந்து 6,630 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளியின் விலை

அதே சமயம் வெள்ளியின் விலையானது கிராமிற்கு 20 காசுகள் உயர்வு கண்டு 96.20 பைசாவிற்கு விற்பனை ஆகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் வெள்ளியின் விலையானது ரூபாய் 100 கடந்து விற்பனையானது நினைவிருக்கலாம்.

தொடர்ந்து தங்கம், வெள்ளி விலையானது சரிய வேண்டும் என்பது சாமானியர்களின் எண்ணமாக இருந்தாலும், நகைக்கடைகளில், கூட்டம் அலைமோதிக்கொண்டுதான் இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை!