மழை, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ்  pt web
இந்தியா

தலைப்பு செய்திகள் | தமிழ்நாட்டில் இங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு To பிரிவில் தனுஷ்- ஐஸ்வர்யா உறுதி!

தெற்கு அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஓரிரு நாட்களில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருமாறும் முதல் பிரிவதில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்த ஐஸ்வர்யா - தனுஷ் வரை மாலை தலைப்புச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PT WEB

தெற்கு அந்தமான் அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது.. ஓரிரு நாட்களில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர் உட்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடருகிறது. மீனவர்களின் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கடல் அரிப்பால் படகுகளும் சேதம் அடைந்துள்ளது.

சென்னையில் நாளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம். பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது. வரும் 25ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்திய தொழிலபதிபர் அதானி மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு.... லஞ்சம் கொடுத்து முதலீடு திரட்டியதாக நியூயார்க்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடன் பத்திரங்களை வெளியிடும் முடிவை தற்காலிகமாக நிறுத்திகொள்வதாக அதானி கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.... முறைகேடு வழக்கு தொடரப்பட்டதை அடுத்து திடீர் முடிவு..

அதானி மீதான முறைகேடு புகாரில் பிரதமர் மோடிக்கும் தொடர்புள்ளது.... அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்.

குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் மறுப்பு!

தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது. நியூயார்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது,.

அதானி நிறுவனத்திற்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் தொடர்பு உள்ளதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதானி நிறுனத்துடன் எந்த வணிக தொடர்பும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

TNGovt

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கும் திட்டத்தை நிராகரிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி உறுதிபட தெரிவித்துள்ளார்.

நடிகை கஸ்தூரி

நீதிமன்ற உத்தரவை அடுத்து புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் கஸ்தூரி... சிறு குரலாக இருந்த தன்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி என பேட்டியளித்துள்ளார்.

மூன்று தினங்களுக்கு பின் குளிக்க வைக்கப்பட்ட திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை. சாப்பிட்டாயா என்ற கேள்விக்கு தலையசைத்து பதிலளித்ததால் ஆச்சரியம்..

விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக தனுஷ்-ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் தகவல்

இல்லற வாழ்க்கையிலிருந்து பிரிவதில் உறுதியாக உள்ளோம் என சென்னையில் நீதிமன்றத்தில் ஆஜராகி தனுஷ் - ஐஸ்வர்யா வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மெய்நிகர் நாணயம் என அழைக்கப்படும் பிட்காயினின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. 2 வாரங்களில் 25 லட்சம் ரூபாய் அதிகரித்து 82 லட்சம் ரூபாயை கடந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது.