இந்தியா

70-வது குடியரசு தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்

70-வது குடியரசு தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்

Rasus

நாட்டின் 70-ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

தலைநகர் டெல்லியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். முப்படை வீரர்களின் அணிவகுப்புடன் வரலாற்று சிறப்புமிக்க ராஜபாதையில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலங்கார வாகனங்கள், ஊர்வலத்தில் இடம் பெறவுள்ளன. பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வரவுள்ளன.

குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், தென்னாப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி, தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் போலீசார், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அணிவகுப்பு நடைபெறும் சாலைகள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேற்றுகிறார். இந்த விழாவில் செவீரர்களின் அணிவகுப்பும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. வீர தீர செயல்களை புரிந்தோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கவுள்ளார். குடியரசு தின விழாவில் அமைச்சர்கள் உள்பட ஏராளமான விஐபிகள் பங்கேற்கின்றனர்.