இந்தியா

சபரிமலை பாதையில் யானை தாக்கி தமிழக பக்தர் உயிரிழப்பு !

சபரிமலை பாதையில் யானை தாக்கி தமிழக பக்தர் உயிரிழப்பு !

jagadeesh

சபரிமலை பெரியப் பாதையில் சென்றுக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

கேரள மாநிலத்தில் பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல இரு பாதைகள் இருக்கின்றன. அதில் ஒன்று பம்பாவில் இருந்து நேரடியாக மலைப் பாதையாக சன்னிதானம் செல்வது. மற்றொரு வழி பாரம்பரிய பாதையான எருமேலியில் இருந்து காட்டு வழிப்பயணமாக கிட்டத் தட்ட 35 கிலோ மீட்டர் நடந்து சென்று சன்னிதானம் செல்வது. இந்தப் பாதையில் ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து அதிகளவிலான பக்தர்கள் பயணம் செய்வார்கள்.

இந்தப் பாதையில் அழுதா நதி தாண்டி முக்குழி பகுதியில் யானை தாக்தி தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. சபரிமலை பெரியப் பாதையில் நள்ளிரவும், அதிகாலையும் பக்தர்கள் பயணம் செய்ய வனத்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.