இந்தியா

"நதிநீர் பங்கீட்டில் நியாயம் கிடைக்க நடவடிக்கை தேவை"- தமிழக அமைச்சர்கள்

"நதிநீர் பங்கீட்டில் நியாயம் கிடைக்க நடவடிக்கை தேவை"- தமிழக அமைச்சர்கள்

jagadeesh

அண்டை மாநிலங்கள் உடனான நதிநீர் பங்கீடு பிரச்னைகளில் நியாயம் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜல்சக்திதுறை அமைச்சரிடம் தமிழ்நாடு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கமணி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இன்று மத்திய ஜல்சக்திதுறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தைச் சந்தித்தனர். அப்போது, கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களுடன் தொடர்ந்து வரும் நதிநீர் பங்கீடு பிரச்னைகள் குறித்து தமிழ்நாட்டிற்கு நியாயம் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

முல்லைப்‌ பெரியாறு அணை பலமாக இல்லை என கேரள நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதற்கு கடந்த வாரத்தில் மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், மேகதாது, பாலாறு ஆகிய விவகாரங்களிலும் தமிழ்நாட்டிற்கு உதவ வேண்டும் என மாநில அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது அதிமுக‌ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் உடன் இருந்தார்.