இந்தியா

தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.1230.90 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.1230.90 கோடி ஒதுக்கீடு

webteam

தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ரூ.1230.90 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள பாரத் நெட் திட்டத்துக்கு மத்திய அரசு 1,230 கோடியே 90 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. தமிழக அரசின் செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளை இணைத்து அரசின் சேவைகளை இணையதளம் மூலம் மக்களுக்கு வழங்கும் திட்டமே பாரத் நெட் எனப்படுகிறது. இதன்படி தமிழகத்தில் உள்ள 12,524 ஊராட்சிகளும் கண்ணாடி இழை குழாய் மூலம் இணைக்கப்பட்டு இணையதள சேவை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் தமிழக அரசின் இணைய சேவைகள், கேபிள் டிவி சேவைகள், மின்னாளுமை சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை மக்கள் கிராமங்களில் இருந்தே பெற முடியும்.