மத்திய அரசின் வேளாண் மசோதாவை எதிர்த்து இந்திய தலைநகர் டெல்லியில் அனைத்து மாநில விவசாயிகளும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அறவழியில் நடந்து வரும் இந்த போராட்டத்தின் பக்கமாக ட்டுமொத்த நாட்டு மக்களின் கவனமும் திரும்பியுள்ளது. இந்நிலையில் தமிழக விவசாயிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்க தொடங்கியுள்ளனர்.
“போராட்டம் இங்கு ஆரம்பித்த உடன் சுமார் 300 பேர் திருச்சியில் இருந்து நாங்கள் போன மாதம் கிளம்பினோம். ஆனால் எங்களை தடுத்து வீட்டு காவலில் வைத்து விட்டார்கள். அதன் பிறகு ஒரு ஐம்பது பேராக கிளம்பினோம். ஆனால் ரயில் நிலையத்தில் எங்களை மறித்து விட்டார்கள். அதனால் ஐந்து பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து தனித்தனியே தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு படையெடுத்து வருகிறோம். எங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம்” என சொல்கின்றனர் தமிழகத்தில் இருந்து வந்துள்ள விவசாயிகள்.