இந்தியா

சுற்றுச்சூழலை பாதுகாக்க பேட்டரி பேருந்து: திருப்பதியில் சோதனை ஓட்டம்

சுற்றுச்சூழலை பாதுகாக்க பேட்டரி பேருந்து: திருப்பதியில் சோதனை ஓட்டம்

webteam

திருப்பதி மலைப்பாதையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ‌வகையில் பேட்டரி பேருந்தின் சோதனை ஓட்டம் நடைபெற்றது..

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் பேட்டரி வாகனங்களை இயக்க ஆந்திர போக்குவரத்து கழகம் முடிவு செய்தது. இதற்காக ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் தயார் செய்யப்பட்ட 32 இருக்கைகள் கொண்ட பேருந்து திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பேருந்துகளில் உள்ள வசதிகள் குறித்தும் எப்படி இயக்குவது என்பது குறித்து டிரைவர்களுக்கு கடந்த சில நாட்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த பேருந்து திருப்பதி பேருந்து நிலையத்தில் இருந்து திருமலைக்கு சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டது. ரூ 1.5 கோடி மதிப்புள்ள இந்த பேருந்தில் பயணிகளின் ஒவ்வொரு இருக்கையிலும் செல்போன் சார்ஜிங் பாயின்ட் உள்ளது. மேலும் பயணிகள் இருக்கைகளை கண்காணிக்கும் விதமாகவும் பேருந்தின் பின்புறமும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. 3 மணி நேரம் சார்ஜிங் செய்வதன் 250 முதல் 300 கிலோ மீட்டர் வரை செல்லும் இந்த பேட்டரி பேருந்து முற்றிலும் ஆட்டோ கியர் வசதிகளுடன் வடிமமைக்கப்பட்டுள்ளது.