video image insta page
இந்தியா

திருப்பதி கோயிலில் பிராங்க் வீடியோ| மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்.. தேவஸ்தானம் கண்டனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிராங்க் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட டி.டி.எஃப்.வாசன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் எச்சரித்துள்ளது.

Prakash J

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இக்கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று, மணிக்கணக்கில் காத்திருந்து சாமி தரிசனம் பெற்று வருகின்றனர். பக்தர்கள் காத்திருந்து பகவானை தரிசிப்பதற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் 32 அறைகள் உள்ளன. இங்கு தரிசனத்திற்காக காத்திருந்துதான் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசனும் அவரது நண்பர்களும் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களிடம் பிராங்க் வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர். அதை, டி.டி.எஃப் வாசன் இன்ஸ்டாவில் ரீல்ஸாகப் போட்டு இருக்கிறார்.

இதையும் படிக்க: புனே|IAS பெண் அதிகாரி மீது விழும் குற்றச்சாட்டுகள்..பணியிட மாற்றத்திற்குப் பிறகு வெளிவரும் தகவல்கள்!

அந்த ரீல்ஸில், ஏழுமலையான் தரிசனத்திற்காக பக்தர்கள் வைகுண்ட மண்டபத்தில் காத்திருக்கின்றனர். தேவஸ்தான ஊழியர்போல காத்திருப்பு அறையின் கதவு பூட்டைத் திறந்து விடுவதுபோல பிராங்க் செய்துள்ளனர்.

இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படி, சாமி தரிசனத்திற்காக மணிக்கணக்கில் காத்திருந்த பக்தர்களை ஏமாற்றி பிராங்க் வெளியிட்ட டி.டி.எஃப் வாசன் மற்றும் அவரது குழுவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் எச்சரித்துள்ளது.

இதையும் படிக்க: கீர்த்தி சக்ரா| வீரமரணம் அடைந்த கேப்டனின் மனைவியை இப்படி இழிவாக பேசலாமா! அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை