Tirupathi pt desk
இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் ஓராண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா?

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 2022 – 23 ஆம் நிதியாண்டில் காணிக்கை வருமானமாக ரூ.1,520.29 கோடி கிடைத்துள்ளது.

PT WEB

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அவ்வாறு வரும் பக்தர்கள் ஏழுமலையான் தரிசிப்பதோடு தங்கம், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் பணத்தை காணிக்கையாக உண்டியலில் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2022 – 23 ஆம் நிதியாண்டில் 1520.29 கோடி ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் 100 கோடி ரூபாய்க்கும் அதிக தொகையை பக்தர்கள் கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். அந்த வகையில் கடந்த 2022-23 நிதியாண்டில் ஏழுமலையானுக்கு காணிக்கை வருமானமாக ரூ.1,520.29 கோடி கிடைத்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 2023-24 ஆம் நிதி ஆண்டில் ரூ.4,411.68 கோடி மதிப்பீட்டிலான பட்ஜெட்டுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.