இந்தியா

”திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மூன்றாவது மலைச்சாலை”- தேவஸ்தான உயர் அதிகாரி தகவல்

”திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மூன்றாவது மலைச்சாலை”- தேவஸ்தான உயர் அதிகாரி தகவல்

நிவேதா ஜெகராஜா

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மூன்றாவது மலைப்பாதை விரைவில் ஏற்படுத்தப்படும் என தேவஸ்தான உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் தலைவர் ஓய்.வி.சுப்பா ரெட்டி, இந்த கருத்தை தெரிவித்தார். மேலும் “கடப்பாவை திருமலை மலையுடன் இணைக்கும் வகையில் அடர்ந்த வனப்பகுதி வழியாக நடைபாதை இருந்தது. அதனை இப்போது சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளோம். இது தவிர தற்போது உள்ள இரு பாதைகளும் அண்மையில் பெய்த பலத்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே அதை சீரமைக்கவுள்ளோம். இதற்காக 3 கோடியே 95 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 3 வாரங்களுக்குள் பணி முடிவடையும்” என்று அவர் கூறினார்.

மலைப்பாதையில் எதிர்காலத்தில் மண் சரிவுகள் ஏற்படாமல் தடுப்பதற்காக மும்பை மற்றும் சென்னை ஐஐடிக்களில் இருந்து நிபுணர்களின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாகவும் சுப்பா ரெட்டி கூறியுள்ளார்.