இந்தியா

75 வயது முதியவர் உடலில் 3,000 சிறுநீரக கற்கள்... ஆபரேஷனே இல்லாமல் அகற்றிய மருத்துவர்கள்!

75 வயது முதியவர் உடலில் 3,000 சிறுநீரக கற்கள்... ஆபரேஷனே இல்லாமல் அகற்றிய மருத்துவர்கள்!

webteam

திருப்பதி அருகே கீ ஹோல் சிகிச்சை மூலம் முதியவரின் கிட்னியில் இருந்து 3000 கற்களை அகற்றி சாதனை படைத்துள்ள மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அலட்சியத்தொடு இருந்த அவரை, அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக உறவினர்கள் சேர்த்துள்ளனர்.

இதையடுத்து முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருடைய சிறுநீரகத்தில் அதிகப்பட்டியாக கற்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் கீ ஹோல் முறைப்படி சிகிச்சை அளித்து வெற்றிகரமாக கற்களை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து வெளியே எடுத்த கற்களை எண்ணிப் பார்த்தபோது அந்த எண்ணிக்கை 3 ஆயிரத்தில் முடிவடைந்து மருத்துவர்களையே அச்சுறுத்தியுள்ளது. இவை அனைத்தையும் அறுவை சிகிச்சை இல்லாமல் நவீன சிகிச்சை முறையில், அதுவும் 75 வயது முதியவரின் உடலிலிருந்து வெளியில் எடுத்ததற்காக மருத்துவர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் அந்த முதியவர் தற்போது உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.