இந்தியா

திருப்பதியில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

webteam

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் பக்தர்கள் 15 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமை அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை 83 ஆயிரத்து 964 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, 32 ஆயிரத்து 340 பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டவை நேற்று எண்ணப்பட்டது. இதில் ரூபாய் நோட்டுகள் மட்டும் ₹ 4.57 கோடியும் மற்றும் சில்லரை நாணயங்கள் என, மொத்தமாக ₹ 5 கோடி ரூபாய்க்கு ஒரே நாளில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருப்பதாக கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.