திருமலை தேவஸ்தானத்திற்கு கொண்டுவரப்பட்ட தரமற்ற 5 டன் முந்திரி பருப்பு கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
திருப்பதி என்றாலே அங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம்தான் பிரசித்தம். லட்டு தயாரிக்க பயன்படும் பல்வேறு பொருள்களை மிகுந்த எச்சரிக்கையோடு வாங்கும் திருப்பதி தேவஸ்தான். இந்நிலையில் லட்டு பிரசாதம் தயாரிக்க தேவையான பொருள்களை கேரள அரசிடமிருந்து கொள்முதல் செய்ய திருப்பதி தேவஸ்தானம் ஒப்பந்தம் செய்துள்ளது.
அதன்படி, கடந்த 3ஆம் தேதி, கேரளாவில் இருந்து முதன்முறையாக 5 டன் முந்திரி பருப்பு திருப்பதிக்கு அனுப்பப்பட்டது. அவற்றின் தரம் குறித்து திருப்பதி தேவஸ்தானம் ஆய்வுக் கூடத்தில் பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவை தரமற்றவை என நிரூபிக்கப்பட்டது. இதனால், 5 டன் முந்திரி பருப்பை தேவஸ்தானம் திருப்பி அனுப்பியது.