இந்தியா

திருப்பதி கோயில் அர்ச்சகர் கொரோனாவால் உயிரிழப்பு

திருப்பதி கோயில் அர்ச்சகர் கொரோனாவால் உயிரிழப்பு

webteam

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் கொரோனாவால் உயிரிழந்தார்.

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜசாமி கோயிலில் நிரந்தர அர்ச்சகராக இருந்தவர் சீனிவாசார்யாலு (45). இவர் திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு தற்காலிக பிரதான அர்ச்சகராக அண்மையில் மாற்றப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த அவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து, திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை மோசமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, பிரதான அர்ச்சகர் சீனிவாச மூர்த்தி கொரோனாவால் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மேலும் 2 அர்ச்சகர்கள் கொரோனாவால் மரணம் அடைந்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து திருமலையில் அர்ச்சகர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.