திருப்பதி தேவஸ்தான வாரிய குழுவினர் புதியதலைமுறை
இந்தியா

“திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்கள் அல்லாத ஊழியர்களை நீக்க வேண்டும்” - தேவஸ்தான வாரியம் கடிதம்

திருமலையில் பணியாற்றும் இந்துக்கள் அல்லாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஆந்திர அரசுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

திருப்பதி திருமலையில் பணியாற்றும் இந்துக்கள் அல்லாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஆந்திர அரசுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாத இறுதியில் ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் தலைவராக பி.ஆர்.நாயுடுவும், அவருடன் 24 பிரமுகர்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் கடந்த நவ 01-ம் தேதி நடந்த்திய ஆலோசனை கூட்டத்தில், “திருமலை திருப்பதி கோவிலில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும்” என்ற பேச்சு எழுந்தது.

திருப்பதி லட்டு

இதையடுத்து தேவஸ்தான வாரியம், ஆந்திர அரசுக்கு தற்போது கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், “திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்கள் அல்லாத ஊழியர்களை பணி நீக்கம் செய்து, அவர்களை அரசின் பிற துறைகளுக்கு மாற்ற வேண்டும் அல்லது விருப்ப ஓய்வு அளித்து வெளியேற்ற வேண்டும்” என்று எழுதப்பட்டிருப்பதாக தெரிகிறது.