உள்கட்சியிலேயே எதிர்ப்பு அதிகரித்ததால் உத்தராகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் பதவி விலகிய நிலையில் அம்மாநிலத்தின் புதிய முதல்வராக எம்.பி. திராத் சிங் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதாவின் ஆட்சி நடைபெற்றுவரும் உத்தராகண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியது. அவரை மாற்ற வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்களே போர்க்கொடி உயர்த்தினர். இதன் தொடர்ச்சியாக டெல்லி சென்ற திரிவேந்திர சிங் ராவத், பாரதிய ஜனதா மேலிடத் தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதனையடுத்து அவர், ஆளுநர் பேபி ராணி மவுர்யாவை சந்தித்து, தனது பதவி விலகல் கடிதத்தை கொடுத்தார்.
அடுத்த முதல்வர் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவார் எனக் கூறினார். இதையடுத்து புதிய முதல்வர் இன்று தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த எம்.பி திராத் சிங் ராவத் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.