இந்தியா

கொரோனாவுக்கு மருந்து என டிக்டாக்கில் வீடியோ: ஊமத்தங்காய் ஜூஸ் குடித்த 10 பேருக்கு சிகிச்சை

கொரோனாவுக்கு மருந்து என டிக்டாக்கில் வீடியோ: ஊமத்தங்காய் ஜூஸ் குடித்த 10 பேருக்கு சிகிச்சை

webteam

கொரோனாவுக்கு மருந்து என டிக் டாக்கில் வந்த வீடியோவை பார்த்து ஊமத்தங்காய் ஜூஸ் செய்து குடித்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலக நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்களும், மருத்துவத்துறை தொடர்பான விஞ்ஞானிகளும் மருந்து தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். சில மருந்துகள் சோதனை முயற்சியில் உள்ளன.

ஆனால், இணையவாசிகள் தங்களது மனதில் தோன்றியதை எல்லாம் கொரோனாவுக்கு தீர்வு என இணையத்தில் வதந்தி பரப்பி வருகின்றனர், எனவே இணையத்தில் வரும் கொரோனா மருந்து தொடர்பான செய்திகளை புறக்கணிக்க வேண்டுமென்றும், அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்றி கொரோனாவுக்கு மருந்து என எதையும் பயன்படுத்தக்கூடாது என்றும் அரசு கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்நிலையில், ஆந்திராவில் டிக் டாக்கில் வந்த வீடியோவை பார்த்து ஜூஸ் செய்து குடித்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஊமத்தங்காயை அரைத்து ஜூஸ் செய்து குடித்ததால் கொரோனா பறந்துவிடும் என டிக் டாக்கில் வீடியோ பார்த்துள்ளனர்.

உடனாடியாக ஊமத்தங்காய் தயார் செய்த அவர்கள் ஜூஸ் செய்து குடித்துள்ளனர். சிறிது நேரத்திலேயே வாந்தி மயக்கம் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர்கள் தற்போது வீடு திரும்பியுள்ளனர். பொதுமக்கள் யாரும் கொரோனா மருந்து என எதையும் உட்கொள்ள வேண்டாமென்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.