இந்தியா

அசாமில் கனமழை வெள்ளத்தில் சிக்கி மூவர் பலி

அசாமில் கனமழை வெள்ளத்தில் சிக்கி மூவர் பலி

ச. முத்துகிருஷ்ணன்

அசாமில் வெளுத்து வாங்கும் கனமழை, வெள்ளப்பெருக்கில் சிக்கி மூவர் உயிரிழந்தனர்.

அசாமில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புப்பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 57 ஆயிரம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நகான், நல்பாரி உள்ளிட்ட பகுதிகளிலும், 12 கிராமங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அசாமின் ஏழு மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மீட்புப்பணிகளில் ராணுவமும் ஈடுபட்டுள்ளது. 10,321 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றன. வெள்ளப்பெருக்கில் சிக்கி மூவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே கேரளாவின் 5 மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், கோழிக்கோடு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து தெரிவித்துள்ளது. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.