இந்தியா

நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள் இதுதான்...

webteam

100 நாள் வேலைத்திட்டத்துக்கு கூடுதலாக ரூ. 40 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. மொத்தம் 100 நாள் வேலைத்திட்டத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 61,000 கோடி.

பொது சுகாதாரத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொற்று நோய் தடுப்பு மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

ஒரே நாடு ஒரே டிஜிட்டல் பிளாட்பார்ம் அமைக்கப்படும். ஒவ்வொரு வகுப்புக்கும் டிவி சேனல் தொடங்கப்படும். மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு பாடத்திட்டம் தொடங்கப்படும். ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இ-வித்யா என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு டிவி சேனல் தொடங்கப்படும். ஆன்லைன் படிப்புகளை தொடங்குவதற்கு 100 பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்ய நிறுவனங்கள் திவாலாவது தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்பட்டால் அதற்கான நடவடிக்கை ஓராண்டு தள்ளி வைக்கப்படுகிறது. ஒரு கோடி வரை வசூல் செய்ய வேண்டிய நிலை வந்தால் மட்டுமே திவாலானதாக அறிவிக்கப்படும். சிறு, குறு தொழில் துறைக்கான சிறப்பு திவால் சட்டம் உருவாக்கப்படும்.

நிறுவனங்கள் மீதான் 7 விதிமீறல்களுக்கான நடவடிக்கைகள் கைவிடப்படுகின்றன. 5 விதிமீறல்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தொழில் செய்ய ஏதுவான சூழல் உருவாக்கப்படும். தொழில்நுட்ப பிரச்னையால் ஏற்படும் தவறுகளுக்கு நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை இல்லை.

பொதுத்துறை நிறுவனக்கொள்கையில் காலத்துக்கேற்ற மாற்றம் செய்யப்படுகின்றன. உத்திசார்ந்த துறைகளில் ஒரேயொரு நிறுவனத்தை தவிர மற்ற அனைத்திலும் தனியார் பங்களிப்புக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தனியார் முதலீட்டிற்கு அனுமதி இல்லாத பிற பொதுத்துறை நிறுவனங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.